நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டங்கள் போராட்டம் மாநில மையம் முடியும்படி அறிவிக்கப்பட்டு முதல் கட்ட போராட்டமாக 13/ 2/ 2024 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்டத் தலைநகரில் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பகுதியாக 22. 2.2024 முதல் அனைத்து அலுவலகப் பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்று காத்திருப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக வேதாரண்யம்வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலக வாயில்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற வேண்டும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும்வருவாய் துறை அலுவலர்களின் பழைய இப்பு வாகனங்களை கழிவு செய்து புதிதாக ஈர்த்து வாகனங்கள் வழங்கிட கோரியும் மேலும்2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழு நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட கோரியும் வேதாரண்யம் வட்ட தலைவர் தோழர் கலாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




