மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய பெண் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை முத்து மற்றும் டெம்பிள் சிட்டி குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து விருதுகளை வழங்கினர்.
மேலும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் அழகேசன் மற்றும் சுலைமான் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல் ஹமீது,எஸ் கே மோகன்,கே ஏ எஸ் குழுமம் ராணி ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


