Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னையில் பெண்களுக்கு ஸ்பெஷல் ஜிம்..மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 21, 2024
in Default
0
சென்னையில் பெண்களுக்கு ஸ்பெஷல் ஜிம்..மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கு என பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். ரிப்பன் மாளிகையில் பட்ஜெட் தாக்கல் செய்த பிரியா, பெண்கள் உடற்பயிற்சிக்கூடம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Mayor Priya announced Special gym for women in Chennai Fund allocation of Rs. 10 crore

2024-2025 ஆம் கல்வியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் கல்வித்துறையின் கீழ் உள்ள 208 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப்பள்ளிகள் 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் தலா 2 செட் வீதம் 1,20,175 மாணவர்களுக்கு சீருடை துணிகள் ரூ. 8.50 கோடி மதிப்பீட்டில் வாங்கி வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை ரூ.3.00 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
சென்னைப் பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு (Imprest Amount) நிதி வழங்கப்படும்

சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் திறமை மிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நேரடியாகவும் மற்றும் இணையதள வாயிலாகவும் SCIENCE TECHONOLOGY ENGINEERING MATHEMATICS (STEM) ACADEMY OF EXCELENCE என்ற பயிற்சி பள்ளியில் சேர்த்து பயிற்சி வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையிலுள்ள 208 தொடக்க மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தமுள்ள 338 பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு 5% வீதம் பச்சை வண்ணப்பலகைகள் வழங்கப்படும். சென்னையில் 19 விளையாட்டு திடல்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.

சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய மாணவர் படை(NCC) மற்றும் சாரண, சாரணியர் இயக்கத்தில் கலந்துக்கொண்டு பங்காற்றி வரும் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கப்படும். அனைத்து சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும், அடையாளஅட்டை (ID Card) வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு சமுதாயக் கல்லூரிகளில் ரூ.50.00 லட்சம் செலவில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

Mayor Priya announced Special gym for women in Chennai Fund allocation of Rs. 10 crore

சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் புத்தகங்கள் அச்சிடப்படும். சென்னை பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35.00 செலவில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்தப்படும்.

உடற்கல்வி மேம்படுத்துவதற்காக விளையாட்டு கருவிகள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை சிறப்பு பயிற்சி அளித்து மண்டல, மாவட்ட, மாநில, தேசிய அளவிளான போட்டிகளில் பங்குபெறச் செய்யப்படும்.

சென்னையில் உள்ள 200 மாநகராட்சிகளிலும் பெண்களுக்கு என பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம் ஏற்படுத்தப்படும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் அறிவித்தார்.

Previous Post

14,000 பேர், 1200 டிராக்டர், 300 கார்கள் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் விவசாயிகள்

Next Post

தமிழ்நாடு செய்ததில் 10%கூட மத்திய அரசு செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாடு செய்ததில் 10%கூட மத்திய அரசு செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு செய்ததில் 10%கூட மத்திய அரசு செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In