திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சிலுக்குவார் பட்டி ஊராட்சியில் கரியாம்பட்டி நடுப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களில் 10 வருடங்களுக்கு மேலாக சாமி கும்பிடுவதில் பிரச்சனை இருப்பதால் இரண்டு கிராம மக்களும் திருவிழா கொண்டாடுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
நடுப்பட்டி கிராம மக்கள் கரியாம்பட்டிக்குள் கரகம் எடுத்துச் செல்ல கரியாம்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு கிராமங்களுமே திருவிழா கொண்டாட சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் இரண்டு கிராம பொதுமக்களும் தங்களது ஊர்களில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகத்தை மட்டும் நடத்தி முடிக்க இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி அளித்தது. இந்த நிலையில் இனி இரண்டு கிராமங்களுக்கும் திருவிழா கொண்டாட எப்பொழுதுமே பிரச்சனை ஏற்படாத வகையில் தீர்வு காணும் வகையில் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி அவர்கள் நேரடியாக நடுப்பட்டி கிராம மக்களை சந்தித்து அவருடைய கோரிக்கையை அறிந்து நடுப்பட்டி கிராம மக்கள் சுமூகமாக திருவிழா கொண்டாடவும் கரகம் எடுத்துச் செல்லவும் மாற்று ஏற்பாடு செய்ய நடுப்பட்டி கிராமத்தை ஒட்டி உள்ள பகுதியில் கரகம் விடுவதற்கு ஏற்ற வகையில் ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
மக்களை நேரடியாக சந்தித்ததை அடுத்து நிலக்கோட்டை வட்டாட்சியரை மக்கள் வெகுவாக பாராட்டினர்..

மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா