தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ள காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அடித்து இழுத்து தரையில் போட்டு நெஞ்சில் காலால் மிதிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என புகார்களும் எழுந்து வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் அந்த இளைஞர்கள் மது அருந்தியதாகவும் அப்போது காவல்துறை அவர்கள் வாகனத்தின் சாவியை பிடுங்கியதால் வாக்குவாதம் முற்றி காவல்துறை அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.

No comments