Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

லோக்சபா தேர்தல்: பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய படை வீரர்களை ஈடுபடுத்த முடிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 15, 2024 - Updated on February 16, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லோக்சபா தேர்தல்: பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய படை வீரர்களை ஈடுபடுத்த முடிவு
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள லோக்சபா மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படையினரை ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

லோக்சபா மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாநில அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், தேர்தல் நடக்கும் நேரம், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்படும் அறை, பதற்றமான இடங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அதற்கு தேவையான மத்திய ஆயுதப்படையினர் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி,

மே.வங்கத்திற்கு 920

காஷ்மீருக்கு 635

சத்தீஸ்கருக்கு 360

பீஹாருக்கு 295

உ.பி.,க்கு 252

ஆந்திரா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தலா 250

குஜராத், மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாட்டிற்கு தலா 200

ஒடிசாவிற்கு 175

அசாம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா 160

மஹாராஷ்டிராவிற்கு 150

ம.பி.,க்கு 113

திரிபுராவிற்கு 100

ஹரியானாவிற்கு 95

அருணாச்சல பிரதேசத்திற்கு 75

கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் டில்லிக்கு தலா 70

கேரளாவிற்கு 66

லடாக்கிற்கு 57

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 55

நாகலாந்துக்கு 48

மேகாலயாவிற்கு 45

சிக்கிமிற்கு 17

மிசோரத்திற்கு 15

தாத்ரா நாகர் ஹவேலிக்கு 14

கோவாவுக்கு 12

சண்டிகருக்கு 11

புதுச்சேரிக்கு 10

அந்தமானுக்கு 5

லட்சத்தீவுக்கு 3 கம்பெனி ஆயுதப்படையினர் தேவை என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி உள்ளது.

இதனையடுத்து சுதந்திரமான மற்றும் நேர்மையான நேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி 3,400 கம்பெனி (3.40 லட்சம் வீரர்கள்) மத்திய ஆயுதப்படையினரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில் அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேவைக்கு ஏற்பவும், வீரர்களின் இருப்பை பொறுத்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டு உள்ளது.

.

Previous Post

“அவர்கள் விவசாயிகள்; கிரிமினல்கள் அல்ல” – எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் பாரத ரத்னா விருது விழாவில் உருக்கம்..

Next Post

காங்கிரசின் அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கம். கேப் விடாமல் இடையூறுகள் மத்தியில் காங்கிரஸ்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரசின் அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கம். கேப் விடாமல் இடையூறுகள் மத்தியில் காங்கிரஸ்.

காங்கிரசின் அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கம். கேப் விடாமல் இடையூறுகள் மத்தியில் காங்கிரஸ்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In