மதுரை 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு வழங்கிய மனுவில் 31 வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் மேயரிடமும் பல்வேறு முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் மாமன்ற கூட்டத்திலும் பேசியும் எந்த பயனும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த இரண்டரை வருடங்களாக எந்தப் பணிகளும் நடக்காத நிலையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினரிடமும் பல்வேறு முறை எடுத்துக் கூறியும் எந்த பயனும் இல்லை. எனது வார்டுக்கு உட்பட்ட கரும்பாலை தல்லாகுளம் போன்ற மக்கள் வசியக்கூடிய இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே கழிவு நீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. அதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கரும்பாலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினார். பின்பு நமது நிருபரிடம் கூறியதாவது எனது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வார்டில் உள்ள மக்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தார்



