பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது.
இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது. முந்தைய ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சபாநாயகராக பதவிவகித்து வந்த அவத் பிஹாரி, பா.ஜ.க. – ஜனதா தளம் கூட்டணி அமைத்த பிறகு தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டினார்.
இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் இன்று ஆளுங்கட்சியினரால் வெற்றி பெற வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற அரசியல்வாதிகளை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை