சென்னை : கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்துள்ளார். 2 நிமிடத்தில் உரையை முடித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தன் இருக்கையில் அமர்ந்தார். முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது என்றும் தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட்ட வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தார்.


ஒரு தேசிய கீதத்தை வைத்துக்கொண்டு இந்த அரசியல்வாதிகள் ஓட்டு ஓட்டு என்று ஓட்டுகிறார்களே இதில் எவரேனும் தேசிய கீதத்தை முழுமையாக பாட தெரியுமா