Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உத்தர்காண்ட் கலவரம் : மதரஸா இடிப்பு கலவரத்தில் 6 பேர் சுட்டுக்கொலை… 3வது நாளில் நிலைமை என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2024
in Default
0
உத்தர்காண்ட் கலவரம் : மதரஸா இடிப்பு கலவரத்தில் 6 பேர் சுட்டுக்கொலை… 3வது நாளில் நிலைமை என்ன?
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹல்த்வானி வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து இதுவரை 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் உறுதி செய்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் பன்புல்புர காவல் நிலையத்திற்கு அருகே இருந்த மதரஸா ஒன்று, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 8ஆம் தேதி புல்டோசர் கொண்டு இடித்தனர்.

இதற்கு அங்குள்ள இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு எதிராக கலவரம் வெடித்தது. அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதோடு அங்கிருந்த போலீஸ் வாகனங்கள் மற்றும் டிரான்ஸ்பர்மருக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் ஹல்த்வானி நகரமே போர்களமாக மாறியது.

Uttrakhand Haldwani Violence police wear salwar suit to save life -Haldwani  Violence: हर तरफ मौत का खौफ, सलवार-सूट पहन पुलिस ने बचाई जान, दरवाजा  खटखटाते रहे उपद्रवी | Jansatta

கலவரத்தை அடுத்து ஹல்த்வானி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலவரக்காரர்களை பார்த்தவுடன் சுட உத்தரவிட்டார்.

அதன்படி ஹல்த்வானியில் சுமார் 1,200 பாதுகாப்பு வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  கலவரத்தில் காயமடைந்த போலீசார் உட்பட சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹல்த்வானியில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3வது நாளாக இன்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிலும் தளர்வு இல்லை. வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

Haldwani Violence: हल्द्वानी हिंसा में अब तक 5 की मौत, 3 गंभीर... DGP ने  बताया कैसे हैं हालात? | Haldwani violence dgp uttarakhand confirmed so far  five casualties and three critical injuries

இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஹல்த்வானி நகரின் முழுப் பகுதியும் 5 சூப்பர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 7 மாஜிஸ்திரேட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எஸ்எஸ்பி நைனிடால் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஹல்த்வானி கலவரம் தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதுவரை 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் – போக்குவரத்து துறை விளக்கம்!

Next Post

கோவை கார் வெடிப்பு வழக்கு : என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை பெரம்பூர் உட்பட 20 இடங்களில் சோதனை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை கார் வெடிப்பு வழக்கு :  என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை பெரம்பூர் உட்பட 20 இடங்களில் சோதனை..

கோவை கார் வெடிப்பு வழக்கு : என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை பெரம்பூர் உட்பட 20 இடங்களில் சோதனை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In