
அதன் அறிக்கையின்படி, பணியாளர்கள் மற்றும் தலைமைத்துவத்தில் பன்முகத்தன்மை இல்லாமை, நியமனங்களில் அரசியல் தலையீடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் காவல்துறை அதிகாரிகளின் நிலைப்பாடு , பொது மக்கள் சமூகத்துடன் ஒத்துழைப்பின்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மற்றும் மைனாரிட்டி பிரிவினரைப் பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்காதது ஆகியவை NHRC யை ஒத்திவைத்ததர்க்கு காரணங்களாக கூறப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையங்களின் உலகளாவிய கூட்டமைப்பு (GANHRI), ஐ நா மனித உரிமைகள் அலுவலகம், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் பிற சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்கிறது. இது இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) அங்கீகாரத்தை இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளது. இந்த கூட்டமைப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த சமீபத்திய அங்கீகாரத்தின் போது NHRC இன் ‘A’ அந்தஸ்தை நிறுத்தி வைத்தது. NHRC, இக்கூட்டணியின் பரிந்துரைகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் 2024 இல் அடுத்த மதிப்பாய்வின் போது அது 'B' நிலைக்குத் தரமிறக்கப்படலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

