Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக டில்லியில் சித்தராமையா போராட்டம்: பா.ஜ., பதிலடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 7, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மத்திய அரசுக்கு எதிராக டில்லியில் சித்தராமையா போராட்டம்: பா.ஜ., பதிலடி
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி : கர்நாடகாவிற்கு முறையாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக்கூறி டில்லி ஜந்தர் மந்தரில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டில்லி மற்றும் பெங்களூருவில் பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது.

கர்நாடகாவிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாகவும், 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு கர்நாடகாவிற்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

இதனை கண்டித்து, டில்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக அரசு சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

டெல்லி : டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பாஜக அரசை  கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில நிதி ...

இந்த போராட்டத்தின் போது பேசிய முதல்வர் சித்தராமையா, நாட்டில், அதிக வரி வசூல் செய்யும் மாநிலங்களில் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் கர்நாடகாவில் ரூ.4.30 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளது. கர்நாடகாவில் ரூ.100 வரி வசூல் செய்து மத்திய அரசுக்கு வழங்கினால், எங்களது பங்காக ரூ.12- 13 மட்டுமே திரும்ப வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., பதிலடி

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டில்லி மற்றும் பெங்களூருவில் பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, சித்தராமையாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய பா.ஜ.,வினர் மத்திய அரசு வழங்கும் நிதியை, மாநில அரசு தவறாக பயன்படுத்தி ஊழல் செய்வதாக குற்றம்சாட்டினர்.

மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம்... கர்நாடகா முதல்வர்  பங்கேற்றதால் பரபரப்பு!

டில்லியில் பார்லிமென்ட் முன்பு மஹாத்மா காந்தி சிலை முன்பு பதாகைகளை ஏந்தி சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ., எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ., எம்.பி.,க்கள் கூறுகையில், உட்கட்சி பிரச்னை காரணமாக, சிவக்குமார் விரும்பியும் முதல்வராக முடியவில்லை. ஆட்சியில் குழப்பம் நிலவுகிறது. இதனால், அவர்கள் டில்லி வந்துள்ளனர் என குற்றம்சாட்டினர்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், கர்நாடகாவில் பொய்யர்களின் ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டினர்.

.

Previous Post

திருத்துறைப்பூண்டி வேதாரன்யம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

Next Post

காங்கிரஸூக்கு 40 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும்… மாநிலங்களவையில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரஸூக்கு 40 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும்… மாநிலங்களவையில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

காங்கிரஸூக்கு 40 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும்... மாநிலங்களவையில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In