திருத்துறைப்பூண்டி வேதாரன்யம் சாலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் கட்டிமேடு ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊராட்சியில் சாலை வசதி குடிநீர் வசதி ஊராட்சியில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரிஊர் பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரனை அணுகி உள்ளார்கள் ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் புகார் சொல்லும் போது காதில் கூட கேட்டுக் கொள்வது இல்லையாம் சிவி சாய்க்காத ஊராட்சி மன்ற தலைவரை பலமுறை நேரில் சந்தித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் ஊராட்சி மன்ற தலைவரையும் ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து இன்று வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி சாலையில் கட்டி மேடு ஊராட்சி அலுவலகம் முன்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது அவர்களை அழைத்து சென்றார்கள்


அறவழி போராட்டம் என்பது வரவேற்கப்பட வேண்டியது எனவே இந்த போராட்டத்திற்கான குறைகளை போக்க மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும்