
ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் சம்பயி சோரன்
ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் இன்று பதவியேற்க உள்ளார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மாளிகையில் பிற்பகல் 12.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நேற்று சம்பயி சோரன் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை புதன்கிழமை சுமாா் 7 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா் அமலாக்கத் துறையினா் அவரை உடனடியாக கைது செய்தனா்.
புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்குரியவரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பயி சோரன் தோ்வு செய்யப்பட்டாா்.
67 வயதான பழங்குடியின தலைவர், மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார்.

