Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வழக்கை வாபஸ் பெற யாரிடம் கேட்க வேண்டும்… டி.ஜெயக்குமார் மகனுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 1, 2024
in Default
1
வழக்கை வாபஸ் பெற யாரிடம் கேட்க வேண்டும்… டி.ஜெயக்குமார் மகனுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அரசு முடிவெடுத்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி-யும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகனுமான ஜெ.ஜெயவர்தனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் இப்போது தெரிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமை செயலகம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் எம்பி-யான ஜெ.ஜெயவர்தன், தன்னையும் இந்த வழக்கில் இணைக்கக் கோரி, மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த பின், கடைசி நேரத்தில் வழக்கில் இணைக்கும்படி மூன்றாவது நபர் கோர முடியாது. இதுநாள் வரை இந்த வழக்கில் தன்னை இணைக்கக் கோராத ஜெயவர்தன், அரசு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்த பின் வழக்கில் தன்னை இணைக்கக் கோரியுள்ளது தவறு. மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உரிமை உள்ளது” என்றார்.

முன்னாள் எம்.பி., ஜெ.ஜெயவர்தன்

முன்னாள் எம்.பி., ஜெ.ஜெயவர்தன்

ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “வழக்கை தாக்கல் செய்தவர் வாபஸ் பெறுவதாக இருந்தால் எதிர்மனுதாரர் கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாது என்ற நிலையில், மூன்றாம் நபர் எப்படி எதிர்க்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. மனுதாரரின் தந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் உள்ளது. நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில் அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது” என்றார்.

ஜெயவர்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “பொதுநலன் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் நீதிமன்றத்தை அணுகவில்லை. தற்போது அரசு எந்தக் காரணமும் தெரிவிக்காமல் வாபஸ் பெறக் கோருவதால் வழக்கில் இணைக்க கோருகிறார் மனுதாரர்” என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு செய்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும்?” என ஜெயவர்த்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு, இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைப்பதாகவும், 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்ததாகவும், அதற்கு முன் வாபஸ் பெறும் எண்ணம் இல்லாததால் வழக்கில் இணைக்க கோரவில்லை எனவும் விளக்கமளித்தார் ஜெயவர்தனின் வழக்கறிஞர்.

இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Previous Post

ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைப்பு: அடுத்து என்ன?

Next Post

எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது – அரசை பாராட்டிய நீதிமன்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது – அரசை பாராட்டிய நீதிமன்றம்!

எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது - அரசை பாராட்டிய நீதிமன்றம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி மிகவும் திறமையானவர் இந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சார்பாக ஆஜர் ஆகியுள்ளார். இவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்பதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In