கடந்த அதிமுக ஆட்சியில் எம்.பி., எம் எல் ஏக்களுக்கு கட்டுமான நிறுவன அதிபர் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை, பெரம்பூர் பின்னி மில்லுக்கு சொந்தமான நிலத்தை வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2015 முதல் 2017 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூர் பின்னி மில்லுக்கு சொந்தமான நிலம் கை மாறியதில் முறைகேடு நடந்ததாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த 2018 ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் லஞ்சம் கொடுத்த உதயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கே.எல்.பி நிறுவன இயக்குனர் சுனில் கேட்பாலியா, மனிஷ் ஃபார்மர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயகுமார், அரசு அதிகாரிகள் யார் யாருக்கு ரூ. 50 கோடி லஞ்சமாக வழக்கியுள்ளார் என தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட ஆவணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

