ஜார்கண்ட் முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…..
மாண்புமிகு ஜார்கண்ட் முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் கைதானது மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அப்பட்டமான சாட்சியாகும். புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது முற்றிலும் அபத்தமானது.. இந்த செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது. பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது.
பாஜகவின் பழிவாங்கும் அரசியல் இருந்தாலும் திரு. ஹேமந்த் சோரன் தலைவணங்க மறுத்து வலுவாக நிற்கிறார். இன்னல்களை எதிர்கொண்டாலும் அவரது மன உறுதி பாராட்டுக்குரியது. பா.ஜ.க.வின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு ஒரு உத்வேகம் அளிக்கிறது.

