மதுரை வட்டார தடய அறிவியல் துறை துணை இயக்குனர் திரு A. பெருமாள் அவர்கள் இன்று பணி ஓய்வு பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை தடய அறிவியல் துணை இயக்குனர், மற்றும் உதவி இயக்குனர்கள் முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. சின்னக்கண்ணு, வட்டார தடய அறிவியல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
திரு .A.பெருமாள் அவர்கள் இயங்கும் தடய அறிவியல் ஆய்வகத்தில் உதவி இயக்குநராக பணி ஆற்றும் போது காவல்துறைக்கு பல்வேறு வழக்குகளின் புலன் விசாரணைக்கு பெரிதும் உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 34 ஆண்டுகள் தடய அறிவியல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணிபுரிந்து இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

