அதிமுக கோவை புறநகர் வடக்கு பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 31 இடங்களில் அதிமுக வின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மற்றும் அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி எம்ஜிஆர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். மேலும் இரு சக்கர வாகனத்தில் கட்சி கொடி கட்டி ஊர்வலமாக பேரணி நடத்தினர். மேலும் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி, கே வி என் ஜெயராமன் நகரச் செயலாளர் ரகுநாதன், ரமாதாமஸ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சசிகுமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் எல் என் தனபால் ,முன்னாள் கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தினால்தான் மக்களுக்கு இந்த அரசியல் கட்சிகளையே நினைவுக்கு வரும் இதனால்தான் அன்னதானம் நடைபெற்று உள்ளது