புதுடில்லி: பேடிஎம் வங்கி செயல்பாடுகளை பிப்ரவரி 29ம் தேதியுடன் நிறுத்த ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் வங்கி செயல்பாடுகளை பிப்ரவரி 29ம் தேதியுடன் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இனி புதிய வாடிக்கையாளர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது.
டெபாசிட் மற்றும் டாப்-அப் பணம் பெறுவதோ கூடாது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வாலட்களில் பணம் பெறுவதோ, பாஸ்ட்டேக், என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ கூடாது. வாடிக்கையாளர்கள் தமது சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, பாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதிக்கக் கூடாது.
வாலட்களில் ஏற்கனவே உள்ள பணத்தை வாடிக்கையாளர் பயன்படுத்த தடையில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இது இரு வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை பிரச்சனை . எனவே இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை