பஞ்சாப் : பாஜக வெற்றி பெற்ற சண்டிகர் மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம், காவல்துறை, மேயர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் முறைகேடு என ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றம் சாடினார். தேர்தல் அதிகாரி முறைகேடாக ஓட்டு சீட்டில் எதோ எழுதி வேண்டுமென்றே 8 ஓட்டுகளை செல்லாத ஓட்டு என்று அறிவித்தார் என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புகார் வைத்தன.
அந்த தேர்தல் அதிகாரி முறைகேடாக ஓட்டு சீட்டில் எதோ எழுதும்போது CCTV கேமரா-வில் பதிவானது. அந்த பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பானது.

