தமிழக அரசின் பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கையின் போது பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழக சிறைகளில் உள்ள எழுத படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறையின் மூலமாக அரசாணை எண்: 102 கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது
இதன் அடிப்படையில்
. தமிழக முழுவதும் ஒன்பது மத்திய சிறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டச் சிறை களில் உள்ள எழுதப் படிக்க தெரியாத சிறைவாசிகள் 1249 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஆறு மாத கால சிறப்பு எழுத்தறிவு கல்வி திட்டம் மூலம் எண்னும் எழுத்தும் கற்கும் வகையில் சிறைத்துறை மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டு 20 சிறைவாசிகளுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமனம் செய்யப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக சிறை துறை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது
மதுரை மத்திய சிறையில் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று இந்த சிறப்பு எழுத்தறிவு திட்டம் துவக்கப்பட்டது
இப் பயிற்சியில் மதுரை மத்திய சிறையைச் சேர்ந்த 77 சிறைவாசிகளும் பெண்கள் சிறையைச் சார்ந்த 30 சிறைவாசிகளும் கல்வி பயில்கின்றனர்
இப்பயிற்சி வகுப்பினை சென்னை பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் திரு. மு. பழனிச்சாமி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சிறைவாசிகள் கல்வி பயிலும் முறை மற்றும் கற்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்
மேலும் சிறைவாசிகளிடம் இதுவரை பயின்று வந்த பாடத்திட்டத்தில் வினாக்களை எழுப்பி பதில்களை கேட்டறிந்தார்
இப் பயிற்சி பெறும் சிறைவாசிகளுக்கு வரும் பிப்ரவரி மாத இறுதியில் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
ஆறு மாத பயிற்சி முடிவில் இவர்களுக்கு கல்வித்துறை மூலமாக சான்றிதழ் வழங்கப்படும் பின் இவர்கள் நேரடியாக எட்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு .பழனி அவர்கள் வழிகாட்டுதலின்படி மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் சிறைத்துறை ஆசிரியர்கள் ஆகியோர் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எழுத படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு படிப்பறிவை கொண்டு வரும் இந்த திட்டம் வரவேற்கப்பட வேண்டியது சிறப்பாக நடக்கட்டும்