Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போலி பத்திரம்.. 20 கோடி நில மோசடி : ஊராட்சி மன்றத் தலைவியை பதவிநீக்கம் செய்ய உத்தரவு!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 25, 2024
in Default
0
போலி பத்திரம்.. 20 கோடி நில மோசடி : ஊராட்சி மன்றத் தலைவியை பதவிநீக்கம் செய்ய உத்தரவு!!
63
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவாரூர்: சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளனர்.இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா, அதிமுகவைச் சேர்ந்த மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் தான் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு மாவட்டக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு எதிரான நில மோசடி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமுதா தலைமறைவாகி இருப்பதாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து அமுதாவை கைது செய்யும் நடவடிக்கை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 12ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க திருவாரூர் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு செல்லக் கூடாது: அமைச்சர்..

Next Post

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: அலைகடலென திரண்ட மக்கள் : மும்பை காவல்துறை கடும் எச்சரிக்கை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: அலைகடலென திரண்ட மக்கள் : மும்பை காவல்துறை கடும் எச்சரிக்கை..!

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: அலைகடலென திரண்ட மக்கள் : மும்பை காவல்துறை கடும் எச்சரிக்கை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In