Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல, கொடூர கொலை : அன்புமணி ராமதாஸ்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 25, 2024
in Default
0
தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல, கொடூர கொலை : அன்புமணி ராமதாஸ்.
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல, அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர கொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். இந்த பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் விபத்து நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு தொப்பூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. சரக்கு லாரி ஒன்று டிராபிக்கில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 13 வாகனங்கள், கார்கள் சேதமடைந்தன. 7 பேர் உயிரிழந்தனர்.

தொப்பூர் கணவாய்  பகுதியில் கடந்த 12 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துகள் நடந்திருப்பதாக தேசிய நெடுஞ்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று நடந்த கோர விபத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது விபத்து தொடர்பான வீடியோ இன்றும் இணையத்தில் வைரலாகி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்தசூழலில் தொப்பூர் உயர்மட்ட சாலை பணியை உடனே தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், நேற்று நடந்தது விபத்து அல்ல, அரசின் அலட்சியத்தால் நடந்த கொலை என மத்திய மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டிய்ள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜனவரி 25) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தர்மபுரியிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 3 கார்கள் மற்றும் இன்னொரு லாரி மீது மோதிய பயங்கரமான சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். லாரி மோதியதில் தீப்பிடித்த முதல் காரில் இருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

2-வது மற்றும் 3-வது கார்களும் விபத்துக்குள்ளானதில் அவற்றில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர் விபத்துக்குள்ளான லாரிகளில் ஒன்று பாலத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதன் ஓட்டுனரும், உதவியாளரும் வெளியில் குதித்து தப்பியுள்ளனர். இந்த விபத்துகளில் மொத்தம் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தொப்பூர் பகுதியில் நேற்று நடந்ததை விபத்து என்று கூற முடியாது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர கொலை என்று தான் கூற வேண்டும். தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது என்பதையும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தொப்பூர் சாலையின் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதவில்லை.

மத்திய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும் தான் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை உணர்ந்து தொப்பூர் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொப்பூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

தைப்பூசத் திருவிழாவில் நேர்ந்த விபரீதம்… தேர் கவிழ்ந்து விழுந்து விபத்து

Next Post

கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு செல்லக் கூடாது: அமைச்சர்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு செல்லக் கூடாது: அமைச்சர்..

கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு செல்லக் கூடாது: அமைச்சர்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In