Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாடு கிட்டயே நெருங்காத குஜராத்.. 10 ஆம் வகுப்பில் 64% தேர்ச்சி! 157 பள்ளியில் அனைவருமே பெயில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in அரசியல் செய்திகள்
0
தமிழ்நாடு கிட்டயே நெருங்காத குஜராத்.. 10 ஆம் வகுப்பில் 64% தேர்ச்சி! 157 பள்ளியில் அனைவருமே பெயில்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் வெறும் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு SSC என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 – 2023 கல்வியாண்டில் படித்த மாணவ மாணவிகளுக்காக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 7.34 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் காலை 8 மணியளவில் gseb.org என்று இணையதள முகவரியில் வெளியாகின. அதில் சீட் வரிசையை தேர்வு செய்து, தேர்வு எண்ணை டைப் செய்து தேர்வு முடிவை அறியலாம்.

குஜராத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைய குறைந்தபட்சம் 33% மதிப்பெண்களையாவது பெற வேண்டும். இந்த நிலையில் குஜராத் கல்வித்துறை வெளியிட்டு இருக்கும் தேர்வு முடிவுகளின்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதாவது தேர்வு எழுதிய 7,34,898 பேர்களில் 4,74,893 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இவர்களில் 6,111 பேர் மட்டுமே A1 கிரேட் பெற்று உள்ளார்கள். 44480 பேர் A2 கிரேடில் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர், B1 கிராடை 86611 பேரும், B2 கிரேடை 1,27,652 பேரும், C1 கிரேடை 1,39,248 பேரும், C2 கிரேடில் 67,373 பேரும், D கிரேடில் 3,412 பேரும், E1 கிரேடில் 6 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளார்கள். இந்த தேர்வு முடிவுகளின்படி கடந்த ஆண்டுகளைபோன்றே இந்த ஆண்டும் சூரத் மாவட்டம்தான் தேர்ச்சி விகிதத்தில் 76.45 சதவீதத்துடன் முதலிடம் பிடித்து உள்ளது.

மறு தேர்வர்களை பொறுத்தவரை 1,58,623 பேர்களில் 27,446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளார்கள். இவர்களின் தேர்ச்சி விகிதம் வெறும் 17.30 சதவீதம் மட்டுமே. இந்த தேர்வில் குஜராத்தில் உள்ள 272 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. 1084 பள்ளிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவானப் தேர்ச்சி விகிதமே பதிவாகி இருக்கிறது. இதில் 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை. இதுவே தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதி 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

Next Post

கும்பகோணம் திங்களூரிலுள்ள பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கும்பகோணம் | திங்களூரிலுள்ள பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் திங்களூரிலுள்ள பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In