பாரிஸ் – நெருங்கிவரும் ஐரோப்பிய தேர்தலுக்கு முன்னதாக, “தேவைப்படும் வரை” போராட்டம் நடத்துவோம் என்று மிகப்பெரிய பிரான்ஸ் விவசாய சங்கத்தின் தலைவர் எச்சரித்தார்.
நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், டிராக்டர் எரிபொருளுக்கான வரி, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயம் செய்வதில் அதிக கட்டுப்பாடுகள் குறித்த குறைகளை ஒளிபரப்புகின்றனர்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை மறித்தும் அரசு கட்டிடங்களுக்கு முன்பாக கழிவுகளை கொட்டியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர், துலூஸ் நகருக்கு அருகில் நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர் என்று உள்ளூர் நாளிதழான லா டெபேச் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபரேஷன் மற்றும் AFP படி, அருகிலுள்ள நகரமான கார்காசோனில் உள்ள ஒரு உள்ளூர் அரசாங்க கட்டிடத்தின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன என்று கூறியது.
பிரெஞ்சு எதிர்ப்புக்கள் சமீபத்திய வாரங்களில் ஐரோப்பா முழுவதும், குறிப்பாக ஜெர்மனி, போலந்து மற்றும் ருமேனியாவில் ஆர்ப்பாட்டங்களை எதிரொலிக்கின்றன. உள்ளூர் குறைகள் வேறுபட்டாலும், இந்த எதிர்ப்புகளின் மூல காரணம் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையில் உள்ளது என்று பிரான்சின் முக்கிய FNSEA விவசாயிகள் சங்கத்தின் தலைவர் Arnaud Rousseau கூறினார்.
ரூசோ ஒரு வானொலி நேர்காணலில், “ஐரோப்பிய புதிய விவசாய கொள்கையை” கடுமையாக விமர்சித்தார். மேலும் விவசாயத்தை பசுமையாக்குவதற்கான ஐரோப்பிய ஆணையத்தின் ஃபார்ம் டு ஃபோர்க் (வயலிலிருந்து உணவு தட்டு வரை)உத்தி விவசாயத் துறையில் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று கூறினார்.
பிரான்ஸ் கிராமப்புற போராட்டம், விவசாயத்தில் அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்த டீசல் விலையை எதிர்கொண்டதால் செவ்வாய்கிழமை அதிகாலையில் பிரெஞ்சு விவசாயிகளால் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரில் கார் ஒன்று இடித்து ஒரு பெண்ணும் அவரது மகளும் கொள்ளப்படுள்ள்ளனர்.
பிரெஞ்சு விவசாயிகள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து அரசாங்க கட்டிடங்களை குறிவைத்துள்ளனர்., அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேசிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விவசாய கொள்கைகளுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.

