பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்ட இராமர் கோவில் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள்..
வாசுதேவநல்லூர் காலணியில் ஸ்ரீ அமிர்த விநாயகர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். புளியங்குடி நகரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இராமபிரானின் திருவுருவ படத்திற்கு ஆராதனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். புளியங்குடி அருணாசலபுரத்தில் வடகாசிஅம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்கள்.அரியநாயகியபுரத்தில் சிறப்பு பஜனையில் கலந்து கொண்டு இராமபிரானின் அருள் கிடைக்க பெற்றோம். அச்சன்புதூர் பேரூராட்சியில் வடகரை கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கடையநல்லூர் ஒன்றியம் ஊர்மேனிஅழகியான் கிராமத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள்.


