நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பர குழுக்களை அதிமுக அமைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான 4 குழுக்களை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பென்ஜமின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, காமராஜ், அமைப்பு செயலாளர் தனபால், செய்தி தொடர்பாளர் கோகுல இந்திரா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் 10 பேர் கொண்ட தேர்தல் விளம்பர குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராஜலெட்சுமி , அப்துல் ரஹீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

