பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் கொடுமைப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டிலேயே ஒரு பெண்ணுக்கு கொடுமை நேர்ந்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பகிரங்கமாக குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார்.


தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்பது மிகப்பெரிய பதவி அதிகாரம் கொண்ட பதவி அதை கையில் வைத்துக் கொண்டு ஒரு மாநில அரசை குறை சொல்லக்கூடாது எங்கு குறை இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் தானே தலையிடும் அதிகாரம் கையில் உள்ளது தாங்கள் அந்த பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு நீதியை நிலை நாட்டலாமே அதை விட்டுவிட்டு கோயில்களை பெருக்கி சுற்றம் செய்கிறேன் தரையை துடைக்கிறேன் என்று சீன் எல்லாம் போட்டு டைமா வேஸ்ட் பண்ணாதீங்க. பெண்களுக்கான சிறைகள் மற்றும் பெண்களுக்கான ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அங்குள்ள குறை பாட்டைநீக்கி பெண்களுக்கு நல்லது செய்யலாமே . பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தலையிட்டு அந்த பெண்களுக்கு நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டியது தானே அந்த அதிகாரம் தங்கள் கையில் இருக்கு அதனால் சொல்கிறேன்