மதுரை மாவட்டம் மதுரைமேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்குளம் என்ற ஊரில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளை நீர்நிலை புறம்போக்கு என்று கூறி மதுரை மாவட்ட நிர்வாகம் முன் அறிவிப்பு இன்றி மாற்று இடம் கூட வழங்கிடாமல் இடித்து தள்ளி உள்ளார்கள்.
இந்த துயரச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி மள்ளர்சேனை சார்பாக ஏதாவது உதவி செய்ய வேண்டி மள்ளர்சேனை நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் சோலைபழனிவேல்ராசன் இந்திரன்கோட்டம் ஆசிரியர் முனைவர்பாண்டியன் DKVRAJAS சேனல் ராஜசேகர் ஆகியோர் சம்பவம் நடந்த ஊருக்கு சென்று அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தனர்.
அது விஷயமாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சௌ.சங்கீதா IAS அவர்களை நேரில் சந்தித்து மாற்று இடம் ஒதுக்கி தர கோரிக்கை வைத்துள்ளனர்.

