எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அஇஅதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தின் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் சமூக சேவைகள் துணை அமைச்சர் திரு. லோகன் கணபதி, MPP அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
அப்போது, ஒண்டாரியோ மாகாணத்தின் கௌரவ இலச்சினையை EPS அவர்களுக்கு அணிவித்தார். இச்சந்திப்பின்போது, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. M.K. சிவாஜிலிங்கம், சன் மாஸ்டர் ஆகியோரும் உடன் இருந்தனர்.



