Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகிய விவேக் ராமசாமி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 16, 2024 - Updated on January 18, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகிய விவேக் ராமசாமி.
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வாஷிங்டன்: அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், முன்னாள் அதிபர் டிரம்புக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. முன்னதாக, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும், ‘காகஸ்’ எனப்படும் மாகாண அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். பாரம்பரியமாக, அயோவா மாகாணத்தில் இருந்து, இந்த தேர்தல் துவங்கும். இந்தாண்டுக்கான காகஸ் தேர்தல், குடியரசு கட்சியில் நேற்று (ஜன.,15) நடைபெற்றது.

குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவரை எதிர்த்து, இந்திய வம்சாவளிகளான, ஐ.நா.,வுக்கான முன்னாள் துாதர் நிக்கி ஹாலே, தொழிலதிபரான விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களம் இறங்கியுள்ளனர். அயோவா தேர்தலில் 51.9 சதவீத ஓட்டுகளுடன் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

ப்ளோரிடா கவர்னர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத ஓட்டுகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி 19 சதவீத ஓட்டுகளுடன் 3ம் இடமும், விவேக் ராமசாமி 7.7 சதவீத ஓட்டுகளுடன் 4ம் இடமும் பெற்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பை விவேக் ராமசாமி வெளியிட்டுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளார். 38 வயதான இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்; தற்போது தொழில்முனைவோராக உள்ளார்.

.

Previous Post

கைப்பேசியில் *401# எண்ணைத் தொடா்பு கொண்டால் என்னவாகும்?

Next Post

உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா: செஸ் தரவரிசையில் இந்தியாவில் ‛டாப்’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா: செஸ் தரவரிசையில் இந்தியாவில் ‛டாப்’

உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா: செஸ் தரவரிசையில் இந்தியாவில் ‛டாப்'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In