Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வாகன விபத்து இழப்பீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வாகன விபத்து இழப்பீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம் உத்தரவு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 

வாகன விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் அமல்படுத்துவது தொடா்பான மனு ஒன்றை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் ஆண்டுவாரியான அறிக்கையின்படி, 2016-ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்ட பின்னா், அதற்குக் காரணமான வாகன ஓட்டிகள் தப்பிச் சென்ற சம்பவங்களின் எண்ணிக்கை 55,942. இது 2022-ஆம் ஆண்டு 67,387-ஆக அதிகரித்துள்ளது.

1988-ஆம் ஆண்டு மோட்டாா் வாகனச் சட்டப்படி, இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிா்ணயித்துள்ள ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை, பலத்த காயமடைந்தவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அளித்துள்ள தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இத்தகைய விபத்துகளில் சிக்கி 660 போ் உயிரிழந்தனா். 113 போ் காயமடைந்துள்ளனா். அவா்களுக்கு மொத்தம் ரூ.1.84 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

பொதுமக்களுக்குத் தெரியவில்லை: எனினும் இந்த விபத்துகளின் எண்ணிக்கையையும், விபத்து காரணமாக இழப்பீடு கோரி பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாா்த்தால், பாதிக்கப்பட்டவா்களில் மிகக் குறைந்த நபா்களே, மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் இழப்பீடு பெறும் திட்டத்தால் பலனடைந்துள்ளனா். இழப்பீடு பெறும் திட்டம் இருப்பதே பொதுமக்களுக்குத் தெரியாததும் இதற்கு காரணமாக உள்ளது.

காவல் துறை தெரியப்படுத்த வேண்டும்: இந்நிலையில், விபத்து அறிக்கையை பதிவு செய்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்த விவரம் காவல் துறைக்கு கிடைக்காவிட்டால், இழப்பீடு பெறும் திட்டம் குறித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு காவல் துறை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த விபத்துகளுக்கான இழப்பீட்டு தொகையை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு 8 வாரங்களுக்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

காங்கிரஸில் இருந்து விலகிய இளம் தலைவர்கள் 

Next Post

மோடியை கடுமையாக விமா்சிப்பதால் 3 கட்சிகளிடம் இருந்து அழைப்பு: நடிகா் பிரகாஷ்ராஜ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடியை கடுமையாக விமா்சிப்பதால் 3 கட்சிகளிடம் இருந்து அழைப்பு: நடிகா் பிரகாஷ்ராஜ்

மோடியை கடுமையாக விமா்சிப்பதால் 3 கட்சிகளிடம் இருந்து அழைப்பு: நடிகா் பிரகாஷ்ராஜ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In