Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காங்கிரஸில் இருந்து விலகிய இளம் தலைவர்கள் 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காங்கிரஸில் இருந்து விலகிய இளம் தலைவர்கள் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 

காங்கிரஸில் இருந்து விலகிய பல்வேறு இளம் தலைவர்களின் பட்டியலில் சமீபத்திய வரவாக மிலிந்த் தேவ்ரா இடம்பெற்றுள்ளார்.

முன்னாள் எம்.பி.யான மிலிந்த் தேவ்ரா, வரும் மக்களவைத் தேர்தலில் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியை காங்கிரஸ் அளிக்கும் என்று காத்திருந்தார். பல ஆண்டுகளாக அவரது குடும்பம் இத்தொகுதியில் போட்டியிட்டு வந்கது.

இது தொடர்பாக மிலிந்த் தேவ்ராவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில் “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறி வருகிறது. இந்நிலையில் அத்தொகுதியில் மிலிந்த் தேவ்ரா போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியை காங்கிரஸால் வழங்க இயலவில்லை. எனவே வேறுவழியின்றி காங்கிரஸில் இருந்து விலகும் முடிவை மிலிந்த் தேவ்ரா எடுத்துள்ளார் என்று தெரிவித்தன.

தாங்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையும் உள்கட்சிப் பூசலும் அத்தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலக வழிவகுத்தன. காங்கிரஸில் இருந்து விலகிய இளம் தலைவர்களின் பட்டியல் பெரியதாகும். இதன் சமீபத்திய வரவாக மிலிந்த் தேவ்ரா இடம்பெற்றுள்ளார்.

விதிவிலக்கான சச்சின் பைலட்… இப்பட்டியலுக்கு விதிவிலக்காக ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இருக்கிறார். காங்கிரஸ் மேலிடத்தை எதிர்த்து அவர் கடந்த 2020-இல் போர்க்கொடி உயர்த்தியபோதிலும் பின்னர் அதை திரும்பப் பெற்றார்.

கட்சி மேலிடம் தனக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போதிலும் அவர் காங்கிரஸ் கட்சியில் தொடருகிறார்.

ஜோதிராதித்ய சிந்தியா… காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச காங்கிரஸ் பிரிவில் கோஷ்டிப்பூசல் வெடித்தபோது பொறுமை காக்கவில்லை; அவர் காங்கிரஸை விட்டு விலகி கடந்த 2020, மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் செய்யும் அவமதிப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஜோதிர் ஆதித்ய சிந்தியா அப்போது தெரிவித்திருந்தார். 

ஜிதின் பிரசாதா…: கடந்த 2021 ஜூன் மாதம், மற்றொரு இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிதின் பிரசாதா, காங்கிரஸை விட்டு விலகினார். மக்களுடனான தொடர்பில் இருந்து கட்சி விலகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். அவரைத் தொடர்ந்து, பல்வேறு இளம் தலைவர்களும் காங்கிரஸை விட்டு விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்தனர்.

அவர்களில் பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸை விட்டு விலகி ஒன்றுபட்ட சிவசேனையில் இணைந்தார். சுஷ்மிதா தேவ், திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷேர்கில் ஆகியோர் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர். 

மூத்த தலைவர் அமரீந்தர் சிங்…: அஸ்ஸாம் மாநில காங்கிரஸில் இருந்து ஹிமந்த விஸ்வ சர்மா, கடந்த 2014 மக்களவைத் தேர்தல் நேரத்தில் விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்தும் பல தலைவர்கள் காங்கிரஸை விட்டு விலகினர். பஞ்சாப் முதல்வராக இருந்த மூத்த தலைவரான அமரீந்தர் சிங்கும் காங்கிரஸை விட்டு விலகினார். 

இந்த விலகல் குறித்து முன்பு ராகுல் காந்தி கருத்து தெரிவித்தபோது “கட்சியில் இருந்து விலக விரும்புவோர் தாராளமாக அதைச் செய்யலாம்’ என்று கூறியுள்ளார்.
 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

மறுகால் பாயும் மாடக்குளம் கண்மாய் கரைகள் ரொம்ப ‘ஸ்ட்ராங்கா’ இருக்கு; 27 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குது

Next Post

வாகன விபத்து இழப்பீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாகன விபத்து இழப்பீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம் உத்தரவு

வாகன விபத்து இழப்பீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In