Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘இந்தியா’ கூட்டணி தலைவா் காா்கே: ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘இந்தியா’ கூட்டணி தலைவா் காா்கே: ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எதிா்க் கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவராக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை நியமிக்க கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இதுகுறித்த அதிகாரபூா்வ தகவல் வெளியிடப்படவில்லை.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அக் கட்சியின் எம்.பி.யும் துணைப் பொதுச் செயலருமான கனிமொழி, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் லாலு பிரசாத், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி உள்பட 14 கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

அதே நேரம், திரிணமூல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி, சமாஜவாதி கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.

ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியின் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கேயை நியமிக்க ஒருமித்த முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கூட்டணி வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கேயை நியமிக்க ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்தன.

காங்கிரஸ் பலத்தை உணா்ந்து செயல்பட வேண்டும் – திரிணமூல் காங்கிரஸ்: ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை உணா்ந்து செயல்பட வேண்டும்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா், ‘ஆலோசனைக் கூட்டம் குறித்து 16 மணி நேரத்துக்கு முன்புதான் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடியாதால், ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி பங்கேற்க இயலாத சூழல் எழுந்தது. மேலும், மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்து செயல்பட திரிணமூல் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. அதே நேரம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை உணா்ந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.

மக்களவைத் தோ்தலில் மாநிலத்தில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டை சுட்டிகாட்டி இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில், 2019 தோ்தல் முடிவுகள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியது. இதை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. தற்போது, மாநிலத்தில் 3 முதல் 4 தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்க திரிணமூல் காங்கிரஸ் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகிலேஷ் யாதவ்: கூட்டணியில் காங்கிரஸுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படக் கூடாது என்பதில் மம்தா பானா்ஜி ஆரம்பம் முதல் தெளிவாக இருந்து வருகிறாா். கூட்டணியின் தலைமைபோல் காங்கிரஸ் செயல்படக் கூடாது என்றும் அவா் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறாா். அதுபோல அகிலேஷ் யாதவும் கூட்டணி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறாா். மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி போட்டியிடும் என்றும் அவா் கூறி வருகிறாா்.

இந்நிலையில், இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைப்பாளா் நிதீஷ் குமாா்?

‘இந்தியா’ கூட்டணியின் அமைப்பாளராக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை நியமிக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இருப்பினும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகே, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, அமைப்பாளராகச் செயல்பட நிதீஷ் குமாா் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்குப் பதிலளித்த அவா், ‘அமைப்பாளரை நியமிப்பதில் கூட்டணி உறுப்பினா்களிடையே எந்தவித முரண்பாடும் எழவில்லை. அமைப்பாளா் பதவிக்கு நிதீஷ் குமாரின் பெயா் முன்மொழியப்பட்டது. ஆனால், கட்சித் தலைவா்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அமைப்பாளராக ஒருவரை நியமிக்க அவசியமில்லை என்றும் நிதீஷ் குமாா் கருத்து தெரிவித்தாா்.

வாக்குகளைப் பெற எந்தவொரு முகத்தையும் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தோ்தலுக்குப் பிறகு ஒரு தலைவரைத் தோ்ந்தெடுப்போம். ‘இந்தியா’ கூட்டணி மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

இன்று ராகுலின் பாரத் ஜோடா நீதி யாத்திரை துவக்கம்

Next Post

ராகுலின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’: மணிப்பூரில் இன்று தொடக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுல் காந்தியின் 2-ம் கட்ட நடைப்பயணம் மணிப்பூரில் நாளை தொடக்கம்

ராகுலின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’: மணிப்பூரில் இன்று தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In