
சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து லட்சத்தீவுகள் பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்கப்படும். சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் லட்சத்தீவுகளுக்கும் சென்னையிலிருந்து விமான சேவை தொடங்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

