
அரவிந்த் கேஜரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
மதுபான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஆஜராக கேஜரிவாலுக்கு முன்னர் மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டபோதும் கேஜரிவால் ஆஜராக மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜன.18 ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இது குறித்து கேஜரிவால் முன்னர் தெரிவித்தாவது, வெளிப்படையற்ற அணுக முடியாத தன்மையோடு கூறிய அமலாக்கத்துறையின் இந்த அணுகுமுறை சட்டம்,சமத்துவம் மற்றும் நீதியின் முன்னர் வலுவற்றது என விமர்சித்தார். மேலும், நீதிபதியின் பணியையும் அமலாக்கத்துறையே மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
நவ.2, டிச.21 மற்றும் ஜன.3 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு முந்தைய சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டன.
2021-22 தில்லி அரசின் புதிய கலால் கொள்கை நடைமுறையின்போது மது பான உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக கேஜரிவால் அரசு ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தக் கொள்கை முடக்கப்பட்டதோடு சிபிஐ விசாரணைக்கு தில்லி லெப்டினண்ட் ஆளுநர் பரிந்துரைத்தன்பேரில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

