Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2024
in Default
1
சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா..!
54
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளை முன்னிட்டு CHENNAI PRESS CLUB – சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பை பரிசாக வழங்கும் விழாவானது வெள்ளிக்கிழமை காலை சுமார் 11 மணி அளவில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆந்திரா சேம்பர் ஆப் காமர்ஸ் உள் அரங்கத்தில் நடைபெற்றது.

சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் ச.விமலேஷ்வரன் அவர்களின் வரவேற்புரையோடு துவங்கிய அவ்விழாவில், தி இந்து நாளிதழின் முன்னாள் தொழிற்சங்க தலைவரும், மூத்த மற்றும் முன்னணி பத்திரிகையாளருமான திரு.இ.கோபால் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னை, திருப்பதி, கோவை, திருப்பூர், திருச்சி என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட சக பத்திரிகை அமைப்புகளின் தலைவர்கள் அனைவருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பரிசை வழங்கி கௌரவித்தார். அப்போது ஏற்புரை ஆற்றிய அவர் சென்னை பிரஸ் கிளப் கடந்து வந்த பாதைகள் குறித்தும், இனிவரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், கடந்த கால தன் அனுபவங்களை நிகழ்கால பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலச்சங்க பொதுச் செயலாளரும், மூத்த ஒளிப்பதிவாளருமான திரு.பெ.வஜ்ஜிரவேல் அவர்கள், பேசும்போது மூத்த பத்திரிகையாளர்களுடன் ஒருங்கிணைந்து இளம் பத்திரிகையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்புடன் செயல்பட்டு வரும் சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியின்போது பேசிய சென்னை பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான திரு.புகாரி செரீப் அவர்கள் பேசும்போது, கடந்த ஆண்டுகளில் சென்னை பிரஸ் கிளப்பின் செயல்பாடுகள் சிறப்புடன் திகழ்வதாகவும், தொடர்ந்து தொய்வில்லாமல் பணிகள் தொடர நிர்வாகிகள் அனைவரும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்.

அரங்கு நிறைந்த கூட்டத்தோடு நடைபெற்ற அவ்விழாவில் சென்னை பிரஸ் கிளப் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.அ.செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் திரு. ந.செல்வராஜ் ஆகியோர் விழா சிறப்புரையாற்ற, துணை தலைவர் திரு. ராஜன் பாபு அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் சென்னை பிரஸ் கிளப் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட 2024 ஆம் ஆண்டிற்கான முதல் நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது.

Previous Post

பாலமுருகனடிமை சுவாமிக்கு 2024-க்கான திருவள்ளுவர் விருது அறிவிப்பு..

Next Post

102 ஆண்டுகளை கடந்த இன்சுலின் கண்டுபிடிப்பு – தேவையும் எதிர்காலமும்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
102 ஆண்டுகளை கடந்த இன்சுலின் கண்டுபிடிப்பு – தேவையும் எதிர்காலமும்..

102 ஆண்டுகளை கடந்த இன்சுலின் கண்டுபிடிப்பு - தேவையும் எதிர்காலமும்..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியது மற்றும் பொங்கல் விழா கொண்டாடியதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In