மதுரை கிழக்கு மாவட்டம் அலங்காநல்லூர் வடக்கு தெற்கு ஒன்றிய சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கீழ கரையில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்டக்கூடாது என்று தி.மு.க. ஸ்டாலின் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தங்கதுரை, இருளப்பன் இவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை கோவிந்த மூர்த்தி மாவட்ட துணைத் தலைவர், தொகுதி அமைப்பாளர் புதூர் ராஜா, பிரச்சாரப் பிரிவு மாநில செயலாளர் தொகுதி பொறுப்பாளர் பழனிவேல்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ரவிசங்கர், சித்ராதேவி, ஜெயபாண்டி சிறப்பு அழைப்பாளர்கள் சங்கர் கணேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே. கண்ணன், ஓபிசி மாவட்ட பொதுச் செயலாளர் ஒன்றிய பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, முத்துக்குமார், ராஜா, கணேஷ், முனீஸ்வரி, சித்ரா, வசந்தி, சோன முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்




இந்த பிஜேபி கட்சியினருக்கு வேறு வேலையே கிடையாது ஒன்று நடைபயணம் மேற்கொள்வது அல்லது ஏதேனும் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று செய்து கொண்டு இருப்பதே இவர்களது பொழுது போக்காக உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு யார் பெயரை வைத்தால் என்ன வைக்காவிட்டால் தான் என்ன இதில் என்ன சர்ச்சை.. இவர்களுக்கு எதற்கு எல்லாம் போராட வேண்டும் என்று தெரியவே இல்லை. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன் சென்னை வேளச்சேரியில் குரு நானக் கல்லூரி அருகில் உள்ள இந்து மயான பூமியில் கிறிஸ்தவர்களின் பிரேதங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு அடக்கம் செய்கின்றனர் . தற்போது இந்து மயான பூமியையே பொது மயான பூமி என்று மாற்றி எழுதியுள்ளார்கள்.. நம் நாட்டில் இதுபோன்றும் இதைவிட பெரியதுமாக பல குற்றங்கள் தவறுகள் நடந்து வருகின்றன இதை தடுக்க ஒரு போராட்டம் நடத்தலாம் அது எல்லாம் விட்டுவிட்டு சும்மா வெத்தா போராட்டம் நடத்தக் கூடாது