Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்துக்கு தகுதி இல்லை… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்துக்கு தகுதி இல்லை… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.!
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேசியத்தன்மை காரணமாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை (ஏஎம்யு) சிறுபான்மை நிறுவனமாக கருத முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்து கடந்த 1968-ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ’தேசியத் தன்மை காரணமாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை (ஏஎம்யு) சிறுபான்மை நிறுவனமாக கருத முடியாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலும் கூட இந்தப் பல்கலைக்கழகம் எப்போதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இருந்து வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 1875-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

துஷார் மேத்தா

துஷார் மேத்தா

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அப்போதைய சட்டப்பேரவை நிலைப்பாடு பற்றிய ஒரு ஆய்வு, இந்தப் பல்கலைக்கழகம் எப்போதும் தேசியத் தன்மையைக் கொண்ட ஒரு நிறுவனமாக இருந்தது என்பதையே காட்டுகிறது.

தேசம் மற்றும் அரசியலமைப்பின் வெளிப்படையான மதச்சார்பற்ற நெறிமுறைகள், தன்மை காரணமாக, இந்தப் பல்கலைக்கழகம் தேசியத் தன்மை கொண்ட நிறுவனம் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அது நிறுவப்பட்ட நேரத்தில் சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டதா இல்லையா என்ற அடிப்படையில் அதனை சிறுபான்மை கல்வி நிறுவனமாக கருத முடியாது” என்றார்.

Previous Post

பெண் நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் அபேஸ்.. பாஜக நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு..!

Next Post

ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அனுமதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அனுமதி!

ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In