Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அங்கித் திவாரி வழக்கு :நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும் லஞ்ச ஒழிப்புத் துறையும் காரசார வாதம்.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அங்கித் திவாரி வழக்கு :நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும் லஞ்ச ஒழிப்புத் துறையும் காரசார வாதம்.!
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இடையே நீதிமன்றத்தில் காரசார வாதம் நடந்தது.

மதுரை அமலாக்கத் துறை அதிகாரியான அங்கித் திவாரி என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி 2 தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி போலீஸாரால் மடக்கிப்பிடித்து அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். ஊழல், லஞ்சம், முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரியே மிரட்டி, லஞ்சம் வாங்கி கைதான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி

இந்நிலையில் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நாளை வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கோரி அமலாக்கத்துறையின் சார்பில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி

கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி

இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா வழக்கை மீண்டும் இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தார். அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறையின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், “அங்கித் திவாரியிடம் தாங்கள் மீண்டும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி அளிக்கக்கூடாது” என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கறிஞர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Previous Post

கருக்கா வினோத் வழக்கில் என்ஐஏ மனு தள்ளுபடி.!!

Next Post

நடிகை மகாலட்சுமியின் கணவருக்கு ஏற்பட்ட மோசமான உடல்நல பிரச்சனை.. ICU-வில் அனுமதி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடிகை மகாலட்சுமியின் கணவருக்கு ஏற்பட்ட மோசமான உடல்நல பிரச்சனை.. ICU-வில் அனுமதி.

நடிகை மகாலட்சுமியின் கணவருக்கு ஏற்பட்ட மோசமான உடல்நல பிரச்சனை.. ICU-வில் அனுமதி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In