Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொடர் சர்ச்சை.. “காங்கிரஸ் ஆட்சிக்கு வராது”… திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தொடர் சர்ச்சை.. “காங்கிரஸ் ஆட்சிக்கு வராது”… திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு.!!
35
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கேட்டை மாவட்டம் ராஜா வீதியில் அமைந்துள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். விழாவை சிறப்பித்த திருநாவுக்கரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “தற்போது, நடந்து வரும் பிரச்சனையில், தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி விரைவில் தீர்வு காண தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

மனிதாபிமான அடிப்படையில் போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிஐடியு உள்பட தொழிற்சங்கங்கள் பங்கேற்றதால் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வராது. தொழிலாளர்களின் பிரச்சனை என்பது வேறு அரசியல் கூட்டணி என்பது வேறு.

கடந்த 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி இறந்தபோது அனுதாப ஆலையால் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய சூழல் இருந்தது. பின்னர் காங்கிரசுடன் அதிமுக கூட்டணியில் சேர்ந்து அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். அப்போது பிரதானமாக எதிர்க்கட்சி தலைவராக உட்கார வேண்டியது நான் தான். அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை ஜெயலலிதா அவர் பக்கம் இழுத்துக் கொண்டார்.

கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கும் கீழ் குறைவான இடங்களை பெற்றுக் கொண்டு ஒரு கட்சி இருக்கும்போது, கட்சியின் நிலை தேக்கத்தில் இருக்கத்தான் செய்யும். இந்த நிலை காங்கிரசுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். அதிமுகவை விட்டு பாஜக தனியாக தேர்தலை சந்தித்து வாக்கு சதவீதத்தை காட்டுவதற்கு முயற்சி செய்கிறது. அது அவர்களது கட்சி வளர்ச்சிக்காக செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை. அதற்கான வளர்ச்சியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை. அதனால் நல்ல கூட்டணியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது” என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தியை நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது திருநாவுக்கரசர் அவர் பங்கிற்கு ஒரு குண்டை போட்டுள்ளார். 

Previous Post

அறுபடை வீடுகளுக்கு இலவசமாக ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

Next Post

பெண்ணை ஆணவ கொலை செய்த பெற்றோர் கைது; போலீஸ் விசாரணை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெண்ணை ஆணவ கொலை செய்த பெற்றோர் கைது; போலீஸ் விசாரணை.

பெண்ணை ஆணவ கொலை செய்த பெற்றோர் கைது; போலீஸ் விசாரணை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In