ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் எழுப்பும் சந்தேகம், கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது, அரசு ஆவணங்களை பகிரக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகிறது. எனினும், தற்போது வரை அவர் நேரடியாக விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

