Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகனை கொன்று சூட்கேஸில் எடுத்துச் சென்ற பெண் தொழிலதிபர்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மகனை கொன்று சூட்கேஸில் எடுத்துச் சென்ற பெண் தொழிலதிபர்.
113
SHARES
183
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நான்கு வயது மகனை பெற்ற தாயே கொலை செய்து சூட்கேஸில் வைத்து உடலை பெங்களூருக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுசனா சேத் (39). சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர், கொல்கத்தாவில் முதுகலை படிப்பை தொடர்ந்ததோடு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றி வந்தார். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றவர் .

பெங்களூருவில் ஏஜே லேப் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். கடந்த ஆறாம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தன்னுடைய நான்கு வயது மகனுடன் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார் சுசனா சேத். இந்நிலையில் நேற்று ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு அவசரமாக பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை பராமரிப்பு செய்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அறையை சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கரை இருந்ததை கண்டு அதிர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஹோட்டல் அறைக்கு வரும் பொழுது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும்போது தனியாக சென்றதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திலும் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஹோட்டலில் இருந்து கிளம்பிய சுசனா சேத்தை செயலி மூலம் பின் தொடர்ந்தனர். அதேபோல் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் ஹோட்டலுக்கு மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும் பொழுது தனியாக சென்றது உறுதியானது.

மேலும் ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, சுசனா சேத் பெங்களூர் செல்ல ஒரு வாடகை கார் வேண்டும் என ஹோட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு விமான டிக்கெட் மிகவும் குறைவு தான் எனவே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் ஹோட்டல் ஊழியர்கள். ஆனால் நான் காரில் தான் பயணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார் சுசனா சேத். அதன்படி வாடகை காரில் கையில் தூக்க முடியாமல் சூட்கேஸ் ஒன்றை சுசனா சேத் எடுத்து சென்றுள்ளார்.

உடனடியாக அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு போலீசார் உங்களுடைய மகன் எங்கே விசாரித்தனர். அதற்கு சுசனா சேத் மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக தெரிவித்து ஒரு முகவரியை சொல்லியுள்ளார். முகவரியை சென்று பார்த்த பொழுது அது போலி முகவரி என்று தெரியவந்தது. இதனால் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறார் என்பது தெரிய வந்தது. அவர் செல்போன் மூலம் ட்ராக் செய்ததில் கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

Shocking hotel room incident

தொடர்ந்து காரின் டிரைவரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு செல்போன் மூலமே போலீசார் அறிவுறுத்தினர். இதனால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கார் சென்றது. காரை சோதனை செய்தபோது காரில் இருந்த பெரிய சூட்கேஸில் சுசனா சேத்துவின் மகன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரே தன்னுடைய மகனை கொன்று விட்டு உடலை சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Previous Post

மிஸ் பண்ணாதீங்க மக்களே – கன்னிமாரா நூலகத்தில் ஏலத்துக்கு வரும் ”பொக்கிஷங்கள்”

Next Post

ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க வித்தை காட்டி வருகிறது – மம்தா.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க வித்தை காட்டி வருகிறது – மம்தா.

ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க வித்தை காட்டி வருகிறது - மம்தா.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    குழந்தைகளை பெற்ற பெண்ணை அதாவது அம்மாவை பெரிய தியாகி போலவும் தெய்வத்தை போலவும் வர்ணிக்கும் நபர்கள் இந்த செய்தியை பார்க்க வேண்டும் தாய் என்பது மிகப் பெரிய புனிதமான பதவியே அல்ல தாய் என்பது அந்த குழந்தைக்கு ஒரு உறவு முறை மட்டுமே. ஒரு வீட்டில் அம்மா அக்கா சித்தி தங்கை பெரியம்மா இது போன்று பல பெண்கள் இருக்கும் போது தன்னை பெற்றவளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தையே அம்மா. இதை சில முட்டாப் பயல்கள் தாய் என்றும் தெய்வத்தாய் என்றும் பத்து மாதம் சுமந்து பெற்றவள் தனது ரத்தத்தையே பாலாக தந்தவள் அப்படி இப்படி என்று மிகைப்படுத்தி பேசி வருகின்றனர்..மனிதர்கள் குட்டி போட்டு பால் கொடுக்கும் விலங்கு வகையை சார்ந்தவர்கள். பிள்ளையை சுமப்பது பெற்று எடுப்பது பிள்ளைக்கு பால் கொடுப்பது அனைத்துமே இயற்கையின் சுழற்சிகள். இச்சம்பவங்களை எல்லாம் ஐந்தறிவு படைத்த அனைத்து வகை விலங்குகள் செய்கின்றன. இதில் எந்த தியாகமும் கிடையாது தனது குழந்தை தனது வயதான காலத்தில் தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே உள்ளது. ஒரு குழந்தையை எதிர்பார்ப்புடன் வளர்ப்பது எந்த வகையில் தியாகம் அப்படி இருக்கையில் நம்ம ஊர் முட்டாப் பயலுகள் நிறையபேர் குழந்தை பெற்ற பெண்களை பெரிய தியாகி போல் வர்ணிக்கின்றனர் இது தவறு இந்த சம்பவத்தில் நாலு வயது மகனை கொன்ற பெண்ணும் நம் சென்னையில் இருக்கட்டும் மற்ற மாவட்டங்களில் இருக்கட்டும் பல பெண்கள் தனது குழந்தைகளை கள்ளக்காதலுக்காக கொன்றுவிட்டு சிறையில் உள்ளனர் இந்த பெண்களும் இது போன்ற பெண்களும் என்ன பெரிய தியாகிகளா அல்லது தெய்வங்களா. எனக்கு தெரிந்த பல வயதான பெண்கள் தனது வயதான காலத்தில் பிள்ளைகளிடம் பாசம் என்கிற வார்த்தையை காட்டி ஏமாற்றியும் போலீஸ் என்ற காவல் துறையை காட்டி மிரட்டியும் சோறு தின்று வருகின்றனர் இந்த அம்மாக்கள் என்ன பெரிய தியாகிகளா அல்லது தெய்வங்களா.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In