கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த 2 1/2 ஆண்டுகளில் பலமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைளை அரசிடம் முன்வைத்தும் போதிலும் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாத சூழலில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றனர். அந்தவகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அரசுப் பேருந்து- கார் மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து பேன்சி கடை முகப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

