Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் நியமனம் செய்யும் பணி தீவிரம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் நியமனம் செய்யும் பணி தீவிரம்..!
95
SHARES
154
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திட்டமிட்டபடி நாளை (ஜன.09) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் நியமனம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Image

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்,15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டாலும்  அதை எதிர்கொள்ள தயார் என அறிவித்திருந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களான அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐடியுசி, சிஐடியு தலைமையிலான போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவு 12:00 மணி முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் திருச்செந்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு தற்காலிக தொழிலாளர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிஐடியு செளந்தராஜன், “2 ஆண்டுகளாக போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாத அரசு, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்ததும், 2 நாட்களில் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து, பேருந்துகளை இயக்கப்போவதாக சொல்கிறார்கள்.  தற்காலிக ஓட்டுநர்களை நியமிப்பதால் மக்களின் பிரச்சனை தீரப்போவது இல்லை. மாறாக அது பிரச்சனையை தீவிரப்படுத்தும். ரோட்டில் ஒட்ட வேண்டிய பேருந்துகளை சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் ஓட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

Previous Post

திமுகவிற்கு அடுத்த சிக்கல்? அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான வழக்கு பிப்.5-இல் விசாரணை.

Next Post

அரசின் நிதி நிலை அறிந்து போக்குவரத்து தொழிலாளர்கள் இணக்கமான முடிவை எட்ட முன் வருக- தங்கர்பச்சான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசின் நிதி நிலை அறிந்து போக்குவரத்து தொழிலாளர்கள் இணக்கமான முடிவை எட்ட முன் வருக- தங்கர்பச்சான்

அரசின் நிதி நிலை அறிந்து போக்குவரத்து தொழிலாளர்கள் இணக்கமான முடிவை எட்ட முன் வருக- தங்கர்பச்சான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In