மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பேச்சிகுளம் ஊராட்சி சார்பாக மைக்கேல் ஸ்கூல் சசி நகர், கீழப்பனங்காடியில், “மக்களுடன் முதல்வர் முகாமை” மேற்கு ஒன்றிய குழு தலைவர் பி. வீரராகவன் தலைமையில் மக்களுக்கான குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீர் வழங்கள் துறை, பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் பல்வேறு அரசு துறைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர் மைக்கேல் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், வட்டாட்சியர் சிவகுமார், பி.டி.ஓ. உலகநாதன், கிளர்க் சக்திவேல், ராஜலட்சுமி வாசு, முருகன், சுந்தர், மீனாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




இந்த அரசு அதிகாரிகளை நம்பி பொதுமக்கள் தரும் குறைதீர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ஏழை மக்களின் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை சரி செய்து கொடுக்க வேண்டும் கொடுப்பார்களா நம் அரசு அதிகாரிகள்