Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

`மணிப்பூருக்கு செல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கிறார்’ – பிரதமர் மீது கார்கே பாய்ச்சல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default
1
`மணிப்பூருக்கு செல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கிறார்’ – பிரதமர் மீது கார்கே பாய்ச்சல்
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று பார்க்காமல், பிரதமர் மோடி கடற்கரை, நீச்சல் சாகசம் என போட்டோ ஷூட் நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

Congress President Mallikarjun Kharge criticised PM, Modi, for prioritizing activities like beach outings, swimming photo sessions, and temple construction site visits over visiting Manipur. #Manipur_Violence #Congress #AyodhyaRamMandir pic.twitter.com/Axz9gFEcds

— Jist (@jist_news) January 6, 2024

காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி தலைமையில் வரும் ஜனவரி 14ம் தேதி முதல் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ தொடங்கப்பட உள்ளது. இந்த யாத்திரையின் சின்னம் மற்றும் ”நியாயம் கிடைக்கும் வரை” என்ற வாசகம் ஆகியவற்றை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இன்று கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். இந்நிகழ்வில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மணிப்பூர் – மகாராஷ்டிரா வரை நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக செல்கிறது. 66 நாட்களில் 6,713 கி.மீ. தூரம் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பயணம் நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்.

'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'  சின்னம், வாசகம் வெளியீடு.

‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ சின்னம், வாசகம் வெளியீடு.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் இந்த யாத்திரையில் பங்கேற்க வேண்டும். மணிப்பூரில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. மணிப்பூருக்கு செல்வதை விட கடற்கரை சுற்றுப்பயணம், நீச்சல் போட்டோ ஷூட், கோயில் கட்டுமான தளங்களுக்கு செல்வது போன்றவற்றுக்கே பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. புதிய தொழிலாளர் மற்றும் குற்றவியல் சட்டங்கள் சர்வாதிகாரத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

Previous Post

கடவுள் தரிசனம் போல எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள்: கார்கே

Next Post

அதிர்ச்சி… 2வது முறையாக மீண்டும் பழுதானது கனட பிரதமரின் விமானம்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி… 2வது முறையாக மீண்டும் பழுதானது கனட பிரதமரின் விமானம்.!

அதிர்ச்சி... 2வது முறையாக மீண்டும் பழுதானது கனட பிரதமரின் விமானம்.!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இது அரசியல் விமர்சனம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In