Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”பத்திரப்பதிவு துறையில் ஊழல் ”: அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
”பத்திரப்பதிவு துறையில் ஊழல் ”: அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
71
SHARES
114
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: ” பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட வேண்டும்” இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

இது குறித்து நிருபர்களுக்கு மதுரையில் அண்ணாமலை அளித்த பேட்டி:

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்து தேவையில்லாமல் திமுக அரசு தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜன.,8ம் தேதி நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்து துறையை நிர்மூலமாக்கியுள்ளது.

எதற்கு எடுத்தாலும் கருணாநிதி பெயர்

ஜல்லிக்கட்டுக்கும் , அலங்காநல்லூருக்கும் சம்மந்தம் இல்லாத பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, கருணாநிதி பெயரை வைப்பதை கைவிட வேண்டும்.

எந்த குழந்தை பிறந்தாலும் கருணாநிதி என்று பெயர் வைப்போம். அண்ணாத்துரை என்று பெயர் வைப்போம் என சட்டம் போட்டாலும் போடுவார்கள்.

ஒழித்துக் கட்டணும்

அமைச்சர் மூர்த்தி வந்த பிறகு பத்திரப்பதிவு துறையில் இமாலய அளவில் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவு துறையில் எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கின்றனர் .பணத்தை வசூலித்து கொடுக்க ஏராளமான புரோக்கர்கள் உள்ளனர். அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 5 மணிக்கு மேல் கூட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. பத்திரப்பதிவுத்துறை பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியுள்ளது. ஒவ்வொரு பத்திரப்பதிவு துறை அலுவலகத்திலும் மாலை 5மணிக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் கட்டு கட்டாக பணம் கிடைக்கும்.

பா.ஜ., போராட்டம்

இந்த போக்கு மாறாவிட்டால் பா.ஜ., போராட்டம் நடத்தும். திருப்பரங்குன்றத்தில் கடவுள் பெயரில் ஒரு புரோக்கர் இருக்கிறார். பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் வீட்டில் சோதனை நடத்தினால் கிடைக்கும் பணத்தில் தமிழகத்தில் உள்ள பாதியளவு கடனை அடைத்து விடலாம்.

2024ம் ஆண்டு தேர்தல் மோடி என்கிற மனிதருக்கான தேர்தல். பிரதமர் வேட்பாளராக மற்றவர்களின் பெயரை கேட்டாலே சிரிக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ., வலுவாக இருக்கிறது. மோடியை பிரதமராக்க ஏற்பவர்களோடு பா.ஜ., கூட்டணி அமைக்கும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

.

Previous Post

விஜயகாந்த் மேலயும் ஏதாவது பழி போட போறா.. அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

Next Post

கடவுள் தரிசனம் போல எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள்: கார்கே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்!

கடவுள் தரிசனம் போல எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள்: கார்கே

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    பத்திர பதிவுத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல்களை அண்ணாமலை மேலோட்டமாக சொல்லி இருக்கிறார் பத்திர பதிவுத்துறை பதிவாளர்களின் லஞ்சம் மிகவும் அதிகமாக உள்ளது இதற்கென்று இடைத்தரகர்களாக பத்திர எழுத்துக்களும் வழக்கறிஞர்களும் செயல்படுகின்றனர் பதிவு துறை அலுவலகங்களை முக்கியமாக சென்னை சைதாப்பேட்டை எண் இரண்டு இணை பதிவாளர் அலுவலகத்தை சோதனை இட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In