Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இலவச பேருந்து பயணத்தால் வாழ்வாதாரம் போச்சு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
இலவச பேருந்து பயணத்தால் வாழ்வாதாரம் போச்சு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்!
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தெலங்கானா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தால்  தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் ரேவந்த் ரெட்டி

முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த  நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது. முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். ஆட்சிக்கு வந்ததையடுத்து  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை தொடங்கியது தெலங்கானா அரசு.

தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சி,  தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் கல்வி (உதவித்தொகை) வழங்கப்படும் என பல திட்டங்கள் குறித்து அறிவித்திருந்தது.

பேருந்தில் இலவச பயணம்

பேருந்தில் இலவச பயணம்

அவற்றுள் முதற்கட்டமாக தெலங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் சொகுசு பேருந்துகள் தவிர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம். 

இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பல லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  ஆட்டோக்களை தேடுவோர் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர்.  பெரும்பாலானவர்கள்  அனைவரும் பேருந்துகளிலேயே பயணிக்க தொடங்கி விட்டனர்.

இதனால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அரசைக் கண்டித்து நேற்று பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous Post

என்ன ஸ்டெர்லைட் நிவாரணமா? வாங்க மறுத்த தூத்துக்குடி மக்கள்.

Next Post

நாடு முழுவதும் அறிவியல் மையம், அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடு முழுவதும் அறிவியல் மையம், அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் அறிவியல் மையம், அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த ஆட்டோக்காரர்கள் கேட்கும் அமௌண்டும் இவர்கள் பண்ணும் டிமாண்டும் மிகவும் தொல்லையாக இருந்தது ஏதோ ஒரு வழியில் இந்த ஆட்டோ டிரைவர்களின் தொல்லை குறைந்தது என்றால் சந்தோஷமே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In